Mithilla Weds Satheesh, 25 Feb 2019

ஆரம்பம்
எனது அண்ணா எனக்கு www.EQMarriageService.com இல் பதிவு செய்திருந்தார், நாங்கள் முதல் சதீஷின் பதிவு பார்த்து, அவரிடம் Chart, Photo request செய்தோம், ஒரு 2-3 நாளில் அவரும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், அவரும் எங்களுக்கு Chart, Photo request கொடுத்தார், நாங்களும் ஏற்று கொண்டோம்.
சதீஷ் படம் பார்த்தேன்
கண்டதும் காதல் போன்று, எனக்கு சதீஷ்யை பிடித்திருந்தது, ஆனாலும் யாதகம் பொருந்த வேண்டும் என நான் கடவுளை பிராத்தனை செய்தேன். மறுநாள் அம்மா எங்கள் இருவரின் யாதாகமும் எங்கள் யோதிடரிடம் போய் பார்த்தார், 70% பொருத்தம், முக்கியமான பொருத்தம் எல்லாம் நன்று என முடிவு வந்தது.... என் மனதில் பட்டாம் பூச்சி சிறகு விரித்து பறக்க, என் மனம் டூயட் பாட ஆயத்தமானது, ஆனாலும் பயம்..... சதீஸ் பக்கம் இருந்து என்ன முடிவு வருமோ என்று.......
தொலைபேசி எண் கோரிக்கை
சதீஸ் பக்கமிருந்து முடிவை அறிய எனது அண்ணா சதீஸிற்கு Contact No request கொடுத்தார், அவர் அதை ஏற்றுக்கொள்ள கிட்டத்தட்ட 3 நாட்கள் ஆகியது, எனக்கு 3 ஆண்டுகள் போல இருந்தது, ஒரு கட்டத்தில் நான் நினைத்தேன் அவருக்கு என்னை பிடிக்கவில்லை போல, என என் மனதில் கட்டிய கோட்டை இடியுமோ என நினைத்தேன்....... அப்போது www.EQMarriageService.com இருந்து ஒரு ஈமெயில் notification வந்தது, "Profile xx contact request ஏற்றுக்கொண்டார்" என்று.... போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது....
தொலைபேசி தொடர்பு
அண்ணா வேலை முடித்து வரும் வரை நிமிடங்களை முட்களாக கடத்தி கொண்டிருந்தேன், அண்ணா வந்ததும், அண்ணா சதீஸ் நம்பருக்கு call செய்தார்........ மறுமுனையில், சதீஷின் அப்பா.....

அண்ணா விபரங்களை சொன்னார், சதீஷின் அப்பா தாங்கள் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை எண்டார், எனினும் சதீஸிக்கு எனது படம் பிடித்ததாகவும் கூறினார். இந்த செய்தி கேட்டபோது எனது மேனியோரம் மெல்லிய தென்றல் காற்றின் ஸ்பரிஸத்தை என் மனம் உணர்ந்தது....
ஏனைய விடயங்கள்
3-4 நாட்கள் கழித்து சதீஸ் அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது, அண்ணாவும் அவரும் நேரடியாக சந்தித்து மற்ற விடயங்களை பேசிக்கொண்டனர்...... எல்லாம் சரியாக வர வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வம் இல்லை.....
விசாரணை
எல்லாம் நலமாக தொடர, விசாரணைகள் ஆரம்பித்தன.... எங்களை பற்றி சதீஷ் பக்கம் இருந்து எங்கள் ஊரில் விசாரித்தார்கள், அதேபோல் அண்ணாவும் அம்மாவும் விசாரித்தார்கள்... எல்லாம் நன்றென அமைத்தது....... அண்ணா சதீஷை நேரடியாக அவரின் அனுமதியுடன் அவரின் அலுவகத்தில் சந்தித்து பேசினார்....
பெண்பார்க்கும் படலம்
எமக்கு பக்கத்தில் உள்ள கோவிலில் பெண் பார்க்க முடிவு எடுக்கப்பட்டது......... எனக்கு வயிற்றுக்குள் 1,000 வண்ணத்துப்பூச்சிகள் சுற்றுவது போல ஒரு உணர்வு - அது ஒரு பயம், ஆச்சரியம், காதல் கலந்த உணர்வு, அனுபவித்தால் தான் அதை உணரமுடியும்..... வார்த்தைகள் இல்லை....
எதிர்பார்த்த தருணம் வந்தது....
சதீஷ் அப்பா தாங்கள் கோவிலுக்கு வந்து நிற்பதாக call செய்தார், அண்ணா, அண்ணி, அம்மா, அண்ணா பிள்ளைகள், சித்தி, சித்தப்பா, மாமா, மாமி, கீழ் வீட்டு அண்ட்ரி, நான் என நாங்கள் அனைவரும் கோவிலுக்கு சென்றோம்.... எனக்கோ ஒருபுறம் வெட்கம் தலை விரித்து ஆடுகிறது, மறுபுறம் பயமும் காதலும் என் உச்சம் தலையில் ஏறி சப்பணம் கட்டி கொண்டிருந்தன.....
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை...
"கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை... கொண்டேன் கொண்டேன் ஆவலை....." என்று பாட தோன்றியது. எதிரே கண்டேன் என் உயிரின் சரி பாதியை, உணர்தேன் காதலை..... சதீஷின் ஓரக்கண் பார்வையால் உள்ளங்கால் முதல் உச்சம் தலை வரை மின்சாரம் பாய்ந்த நிலை அடைந்தேன்..... எங்கள் சொந்தங்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் செய்து கதைக்கிறார்கள்.... நாங்கள் இருவர் மட்டும் பிடித்து வைத்த சிலைகள் போல நேரடியாக பார்க்கவும் முடியாமல், மனம் விட்டு கதைக்கவும் முடியாமல் மௌனமாக இருந்தோம்.... எங்கள் அண்ணி எங்கள் நிலை கண்டு....... "மாப்பிள்ளையும் பெண்ணும் தனியாக கதைக்கட்டுமே" என்றார்....
Western Proposal
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சதீஷ், திடீர் என்று மேற்கத்தேய பாணியில், முட்டுக்காலில் இருந்து ஒரு ரோஜா பூவை நீட்டி "Will you marry me" என்றார், நான் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து வாய் அடைத்து நின்றேன், மீண்டும் கேட்டார், நான் "Sure, Yes of course" என்றேன்.......
Love Birds
நாங்கள் mobile number பரிமாறி கொண்டோம்...... காதலர்கள் ஆனோம்...... திருமண திகதி குறிக்கப்பட்டது...... இன்று இருவரும் சந்தோஷமாக இல்லறவாழ்வில் இணைந்து இருக்கிறோம்..... இந்த தருணத்தில் எங்களை இணைத்ததற்கு நாங்கள் இருவரும் www.EQMarriageService.com இற்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.......

www.EQMarriageService.com பற்றி சொல்வதென்றால், இது ஒரு இலகுவான இணையதளம், மற்ற தளங்கள் மாதிரி எங்கள் படம் வெளியிடப்படவில்லை, broker commission ஏதும் இல்லை, எங்களுக்கு விருப்பமான profile ஐ நாங்களே நேரடியாக தொடர்பு கொள்ளலாம்........... மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் www.EQMarriageService.com இற்கு....
இப்படிக்கு,
சதீஷ் & மிதிலா
Terms & Conditions   |     Privacy Policy
Copyright © 2024 Ensured Quality Lanka (Pvt) Ltd, All Rights Reserved. (Company Number : PV 00220222)